உதகை,ஆக 8 - நீலகிரியில் தென்மேற்குப் பருவமழை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் நடை பெற்றது. உதகையிலுள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் நக ராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங் கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற் றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வெள்ளியன்று தென் மேற்குப் பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் அனைத் துத்துறை அரசு அலுவலர்களுடன் நடைபெற்றது.
முன்னதாக கனமழை காரணமாக மரம் விழுந்ததால் உயி ரிழந்த உதகை கோக்கால் பகுதியைச் சேர்ந்த ரவி, பிங்கர் போஸ்ட் ஆர்.சி காலனியைச் சேர்ந்த சாதிக் அலி ஆகியோ ரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையையும், கடந்த 45 ஆண்டுகளாக சாதிச் சான்று கேட்டுப் போராடி வந்த ஈழுவா, தீயா பிரிவினருக்கு சாதிச் சான்றிதழையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. இன்ன சென்ட் திவ்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.சாந்தி ராமு(குன்னூர்), ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப்பாளையம்), நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி டி.வினோத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.