புதுதில்லி,நவம்பர்.29- வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 23ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
ஃபெஞ்சல் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்கவுள்ளதாகவும், புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.