மோந்தா புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மோந்தா புயலானது மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு - தென்கிழக்கில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவுக்குள் ‘மோந்தா’ தீவிர புயலாக கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனனையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
