காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுப்பெற்றுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் வருகின்ற 27ஆம் தேதி புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதைக் குறிக்கும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு தமிழ்நாட்டின் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது
