ஊட்டி அருகே சாலையோரப் பாறாங்கற்கள் வாகன ஓட்டிகள் அவதி; அகற்றக் கோரிக்கை
உதகை, அக். 27- ஊட்டியிலிருந்து ஆடாசோலை, தேனாடுகம்பை வழியாக அணைக்கொரை, கடநாடு உள்ளிட்ட கிராமங் களுக்குச் செல்லும் சாலையில், விரிவாக்கப் பணிகளுக் காக அகற்றப்பட்ட பாறாங்கற்கள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அவற்றை உட னடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள் ளது. ஊட்டியில் இருந்து ஆடாசோலை, தேனாடுகம்பை வழியாக அணிக்கொரை, கடநாடு, பெந்தட்டி, சின்னக் குன்னூர், தொரைஹட்டி, கெங்கமுடி, தூணேரி, கொது முடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளும், தனியார் வாகனங்களும் இந்தச் சாலை யைப் பயன்படுத்தி வருகின்றன. இதுதவிர, இப் பகுதி களில் மலைக் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப் படுவதால், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. குறுகலாக இருந்த இச் சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று நெடுஞ் சாலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிர மிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணியின்போது, சாலையில் பெரிய அளவி லான பாறாங்கற்கள் விழுந்தன. அவ்வாறு விழுந்த பாறாங்கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் உடைத்து அகற்றாமல், ஆங்காங்கே சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், “சாலை விரிவாக்கப் பணி தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், விரிவாக்கத்தின் போது விழுந்த பாறாங்கற்களைச் சாலையோரத்தில் குவித்து வைத் துள்ளனர். இந்தக் குறுகிய சாலையில் எதிரே வரும் வாக னங்களுக்கு வழிவிட்டுச் செல்ல முயலும்போது, இந்தக் கற்களால் வாகனங்களை அடிக்கடி பின்னோக்கி நகர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சாலையோரத்தில் குவித்து வைக் கப்பட்டுள்ள பாறாங்கற்களை நெடுஞ்சாலைத்துறையி னர் உடனடியாக அகற்ற வேண்டும்,” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
