சென்னை:
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.திண்டுக்கல், ஈரோடு, நெல்லை மாவட் டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.தமிழகத்தில் அதிகபட்சமாக களியக்காவிளையில் 11 செ.மீ., குழித்துறையில் 10 செ.மீ., கன்னியாகுமரியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.