கொச்சி
கேரளத்தில் ஜூன் மாதத்திலிருந்து தென் மேற்கு பருவமழை மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கையில் சற்று தொய்வு ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு (ஆகஸ்ட் 30-ஆம் தேதி) இடைவிடா பலத்த மழை பெய்யும் என கேரள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட 4 நாட்களில் மாநிலம் முழுவதும் 64.5 மிமீ முதல் 114.5 மிமீ மழை வாய்ப்புள்ளதால், பேரிடர் மேலாண்மை துறையினரை 24 மணிநேரம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.