weather

img

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு – வலுவடைய வாய்ப்பு இல்லை!

வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது அதே இடங்களில் நிலவி வருகிறது. இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
இதனால், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடல்பரப்பில் மிதமான காற்றோட்டம் மற்றும் அலைச்சல்கள் இருக்கும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கான வானிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.