weather

img

தஞ்சாவூரில் இடைவிடாத மழை.... இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சாவூர்:
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவான நிவர் புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை தொடர்ந்து இடைவிடாத மழை பெய்தது. 

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தமிழக அரசால் ஏற்கெனவே தஞ்சாவூர் உள்ளிட்டபிற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புறங்களிலிருந்து பொதுமக்கள் யாரும் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு வரவில்லை. மேலும் நகரங்களில் வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. ஒரு சிலதேனீர், உணவகங்கள், பெட்டிக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.புயல் காரணமாக புதன்கிழமை காலை முதல் மாலை வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், பொதுமக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கினர். இயல்பு வாழ்க்கைபெரிதும் பாதிக்கப்பட்டது.

மரங்கள் முறிந்தன
மழையோடு அவ்வப்போது காற் றும் வீசியதால், பாபநாசம் அருகே நல்லூர் வாழைப்பழக்கடை என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் இருந்த சுமார்50 ஆண்டுகாலம் பழமையான தூங்குமூஞ்சி மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லின் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினர். கும்பகோணம் பகுதியில் சாலையோரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங் களை நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். கஜா புயலின் போது பெரிய அளவில் மரங்கள் முறிந்து சேதமானதால்,தற்போது புயலில் மரங்கள் சேதமாவதை தடுக்கும் விதத்தில் பொதுமக்களே தங்களது வீடுகளின் அருகே உள்ள மரங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெட்டி அகற்றினர்.

;