technology

img

இந்தியாவில் 1.94 லட்சம் எக்ஸ் கணக்குகளுக்கு தடை!

மே 26-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 1,94,053 எக்ஸ் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
எக்ஸ் நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் வகையில், குழந்தைகள் பாலியல் அத்துமீறல், ஆபாசமான உள்ளடக்கங்களை பகிர்ந்த கணக்குகளும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட 1,991 கணக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், புதிய தகவல்தொழில்நுட்ப விதிகள் 2021-இன்படி, எக்ஸ் பயனர்களிடமிருந்து ஒரு மாதத்துக்குள் 12,570 வந்துள்ளதாகவும், கணக்குகள் முடக்கம் தொடர்பான 55 மேல்முறையீடுகள் வந்துள்ளதாகவும், அவற்றில் 4 கணக்குகளை மீண்டும் இயங்க அனுமதித்துள்ளதாகவும், மீதியுள்ள கணக்குகளுக்கான தடை தொடரும் எனவும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.