ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் தனது முதலாவது மின்சாரக் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த மின்சாரக் காரின் புகைப்படம் மற்றும் விவரங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து மாடல் கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.