2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு டூடுள் ஒன்றை கூகிள் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 1973 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களை கௌரவிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதை சுட்டிகாட்டும் விதத்தில் சிறப்பு டூடுள் ஒன்றை கூகிள் வெளியிட்டுள்ளது.