technology

img

இன்று அறிமுகமாகும் ரெட்மி நோட் 11 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் 

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11' ’ரெட்மி நோட் 11 புரோ ' ஸ்மார்ட்போன்களை சீனாவில் இன்று அறிமுகப்படுத்துகிறது.

'ரெட்மி நோட்’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் அதிக சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 'ரெட்மி நோட் 11'  6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை, 850 மீடியாடெக் டைமன்சிட்டி, 4 ஜிபி உள்ளக நினைவகம் , 64 ஜிபி கூடுதல் நினைவகம், பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது, 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஒஎஸ், டைப் - சி போர்ட் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.  

’ரெட்மி நோட் 11 புரோ’ 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை, 920 மீடியாடெக் டைம்சிட்டி, 6 ஜிபி உள்ளக நினைவகம், 128 ஜிபி கூடுதல் நினைவகம், பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது, 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி , ஆன்டிராய்டு 11 ஒஎஸ், டைப் சி போர்ட் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.