technology

img

Instagram: Direct Message-ல் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்!

தேவையற்ற செய்திகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க, Direct Message-ல் இரண்டு கட்டுப்பாட்டுக்களை கொண்டுவந்துள்ளது.

Meta-க்கு சொந்தமான சமூக ஊடக தளமான Instagram, பயனர் பாதுகாப்பை மேம்படுத்தவும் தேவையற்ற செய்திகளின் கோரிக்கைகளுக்கு எதிராக ஒரு புதிய இந்த கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஜூன் மாதம் சோதனை செய்து இரண்டு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. முதலாவதாக, பயனர்கள் unfollowers-க்கு ஒரு செய்தியை மட்டுமே அனுப்ப அனுமதிக்கும், பல request-க்குகள் கொடுப்பதை நீக்குகிறது.

இரண்டாவதாக, DM அழைப்புகள் text-கள் அடிப்படையில் இருக்கும், அதாவது பெறுநர் அரட்டை அழைப்பை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனுப்புநர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோ செய்திகளைப் பகிர முடியும்.

இந்தக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவதன் மூலம், அந்நியர்களிடமிருந்து கோரப்படாத மற்றும் பொருத்தமற்ற message-கள் பெறுவதிலிருந்து பயனர்களைத் தடுப்பது மட்டுமின்றி பயனர்களின் பாதுகாப்பையும் Instagram நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏற்கனவே "மறைக்கப்பட்ட வார்த்தைகள்" அமைப்பு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டது. இது ஒரு மறைக்கப்பட்ட கோப்புறையில் புண்படுத்தும் உள்ளடக்கத்தைக் கொண்ட DM request-களை தானாகவே மற்றும் தேவையற்ற கருத்துக்களை நிராகரிக்கிறது.