யுபிஐ சேவைகள் முடக்கம்
தொழில்நுட்பக் கோளாறு கார ணமாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக் கப்ட்டதால் பயனர் கள் பெரிதும் அவ திக்குள்ளாகினர். கூகுள் பே, பேடி எம், போன்பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாததால், வாடிக்கை யாளர்களும், வியாபாரிகளும் கடும் சிர மத்துக்கு உள்ளாகினர். தொழில்நுட்பக் கோளாறு குறைபாடுகளை கண்கா ணிக்கும் “டவுன் டிடெக்டர்” என்ற வலைதளத்தின்படி, பகல் 12:56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகி யுள்ளன. 80% வாடிக்கையாளர்கள் தங்க ளின் கட்டணங்களைச் செலுத்த முடியா மல் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப் பட்டுள்ளனர்” என அதில் கூறப்பட் டுள்ளது. மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் யுபிஐ சேவைகள் முடக்கம் ஒன்றும் புதி தல்ல. கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.