உத்திரப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் 10 பேரை சுட்டு படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் காஞ்சி இருளர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று (ஜூலை 29) செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா. சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், நகரச் செயலாளர் வி.வேலன், வி.ச. மாவட்டத் தலைவர் ஜி.மோகன், செயலாளர் கே.நேரு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எல். முருசேன், பொருளாளர் கே.ராகும், காஞ்சி இருளர் மக்கள் கூட்டமைப்புச் செயலாளர் எம்.சொர்ணலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.