tamilnadu

கொரோனா நோய் தடுப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

செங்கல்பட்டு, மார்ச் 17- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக கொரோனா வைரஸ் நோய்  தடுப்பு குறித்து பொதுமக்க ளிடமிருந்து புகார்கள் பெற  கட்டுபாட்டு அறை திறக் கப்பட்டுள்ளது இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா, விடுத்துள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத் தில் மசூதிகள், தேவால யங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் வழி பாட்டுத் தலங்களுக்கு வரும்  பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு முன்பும், சென்று வந்த பின்பும் கைகழு வும் திரவத்தினை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனை மற்  றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளான மீனாட்சி மற்றும் சவீதா மருத்துவக் கல்லூரியில் தீவிர நோய்  தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆட்டோக்கள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தூய்மைப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். ஒவ் வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30  விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமும்  போதும் தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்  களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல்,  இருமல் போன்ற அறிகுறி கள் தென்பட்டால் உடனே  அருகில் உள்ள மருத்துவரை  அணுகவும். இளநீர் ஓ.ஆர்.எஸ்., கஞ்சி போன்ற  நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங் களை பருக வேண்டும். மேலும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய்  தடுப்பு குறித்து பொதுமக்க ளிடமிருந்து புகார்களை பெற மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் 044-27237107 / 044-27237207 செயல்படும் கட்டுப்பாடு அறையினை தொடர்பு கொள்ளலாம் என  தெரிவித்துள்ளார்.

;