செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திங்களன்று (ஜூன் 29) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கப்பட்டது. ஹோமியோபதி மருத்துவர் ஜவகர், அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் முகமது உசேன், தாமோதரன், லெனின், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகி மருத்துவர் வா.பிரமிளா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் மபா.நந்தன் க.புருஷோத்தமன் ர.பரணிவர்மன் உள்ளிட்டோர் மருந்துகளை வழங்கினர்.