tamilnadu

img

வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவை விடுவிக்க முடிவு  

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ருந்த  சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு 5ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்பட உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள்  பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக  மத்தியஅரசு தெரிவித்திருந்தது.

சுமார் 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது பரூக் அப்துல்லாவை மீதான காவலை விலக்கிக்கொள்வதாக காஷ்மீர் அரசு அறிவித்து உள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் அதற்கான உத்தரவை வெளியிட்டு உள்ளார்.