tamilnadu

img

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் சேவை....

ஸ்ரீநகர்:
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு உச்சநீதிமன்ற உத்தரவால் ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ப்ரீபெய்ட்சந்தாதாரர்களுக்கான செல்போன் அழைப்புமற்றும் எஸ்எம்எஸ் சேவை சனிக்கிழமையன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
தீவிர ஆலோசனைக்குப் பின் செல்போன் சேவையும் எஸ்எம்எஸ் சேவையும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைச் செயலர் ரோகித் கன்சால் கூறியுள்ளார்.ஜம்மு-காஷ்மீரில் இணையச் சேவை முடக்கம் உள்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும்என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, படிப்படியாக அங்கு தடை விதிக்கப்பட்டிருந்த சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இணையதளம் வாயிலாக கருத்துக்களை வெளியிடுவதற்கும், தொழில்-வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு உள்ளது’என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கி, மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள் ஜம்மு-காஷ்மீருக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையச் சேவைகள் தொடா்ந்து முடக்கப்பட்டன.

இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத்,காஷ்மீா் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியா் அனுராதா பாசின் உள்ளிட்டோா் தாக்கல்செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, பி.ஆா். கவாய், ஆா்.சுபாஷ் ரெட்டி, ஆகியோரைக் கொண்ட அமா்வு தீா்ப்பளித்தது. தீர்ப்பில், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போ, கள நிலவரத்துக்கும், கட்டுப்பாடுகளால் ஏற்படும் தாக்கத்துக்கும் இடையிலான மதிப்பீட்டை கவனத்தில் கொள்ள வேண்டும். இணையச் சேவை மீதான கட்டுப்பாடு, காலவரையின்றி தொடா்வதை அனுமதிக்க முடியாது.காஷ்மீரில் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக இணையச் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இணையச்சேவை முடக்கம் தொடா்பான அனைத்து உத்தரவுகளும் உடனடியாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும். ஊடக சுதந்திரமானது, மதிப்புமிக்க உரிமை என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

;