வேலூர், ஆக. 20- வேலூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்கு விஐடி சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மூலம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் 100 பேருக்கு ஆங்கில மொழித்திறனை வளர்ப்பதற்கு பல்வேறு முறைகளில் கற்பிக்கப்படும். இந்த கருத்தரங்கின் மூலம் ஆசிரிய, ஆசிரியைகள் தங்கள் ஆங்கில மொழித் திறனை மேம்ப டுத்திக் கொள்ளமுடியும். சுலபமாக ஆங்கிலத்தில் பேச முடியும். இதன் மூலம் மாணவர்களுக்கு சுலபமாக புரியக் கூடிய வகையில் ஆங்கிலம் பேசுவதற்கு ஆசிரிய, ஆசிரியை கள் தயாராகி மாணவ, மாணவி களையும் தயார் படுத்தி விடு வார்கள். அரசுப் பள்ளி ஆசிரிய, ஆசிரியை களுக்கு விஐடியின் சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளியின், ஆங்கிலத் துறை பேராசிரியைகள் முனைவர். மீனாட்சி, முனைவர் காயத்திரி ஆகியோர் ஆங்கில மொழித் திறன் பயிற்சி வகுப்பை நடத்தினர். இந்த கருத்தரங்கை விஐடி வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதன் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், விஐடி பதி வாளர் முனைவர். கே. சத்திய நாராய ணன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டக் கல்வி அலுவலர் லட்சுமி பங்கேற்றார் ஆங்கிலத் துறை பேரா சிரியை முனைவர் என். காயத்திரி நன்றி கூறினார்.