சென்னை,ஆக.16- எல்எம்டபிள்யூ நிறுவனம் மற்றும் போயிங் இந்தியா விமான தயாரிப்பு நிறு வனம் இணைந்து நடத்தும் திறன் மேம் பாட்டு மையம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இருவரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத்,“தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை குறைந்த அளவிலேயே உள்ளது என்றும் ஆட்டோ மொபைல் தொழிலில் விற்பனை மட்டுமே சிறிது சரிவை சந்தித்துள்ளது” என்றார்