வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ராணிப்பேட்டை சாராட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. என்.ரமேஷ், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள் எல்.சி.மணி, ஆர்.ரகுபதி, தா.வெங்கடேசன், நிலவு குப்புசாமி, ஏ.ரேணு, குணசேக ரன், சி.பெருமாள், என்.துளசி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.