சென்னை, டிச. 16- புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி சிலைக் கடத்தல் வழக்கின் முழு உண்மைகளை விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதி விட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஐஜியாக அன்பு நியமிக்கப் பட்டார். அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தர வின்படி தான் விசாரித்து வந்த வழக்குகள் தொடர் பான ஆவணங்களை ஏடிஜிபியிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்தார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில், புதிய விசாரணை அதிகாரியான அன்பு அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படாமல், சிலை திருட்டு வழக்கின் உண்மைகளை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிக் கொண்டுவர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.