வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதி திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி நகராட்சி அலுவலகத் தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்க ளது பகுதிகளில் உள்ள குறைபாடுகளை, நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குறைகளை நிவர்த்தி செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.