tamilnadu

img

குடியாத்ததில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் அடுத்த மோடிக் குப்பம் பகுதியில் வனவிலங்குகளால், விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படுகிறது. விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினரும், வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.