சின்னாளபட்டி, நவ.16- சென்னை பழைய வண்ணா ரப்பேட்டையைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஜவுளி வியாபாரி. இவரது மகன்கள் ஜெகன் (36), குமரேசன் (32). தந்தைக்கு உதவியாக சகோதரர்கள் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இவர்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி கிராமம். மாரியப்பன் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சாமி கும்பிட வந்துள்ளார். கன மழை காரண மாக வைகை அணையில் கூடு தல் தண்ணீர் திறக்கப்படுவ தால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வைகை ஆற்றில் குளித்து விட்டு பின்னர் சாமி தரிசனம் செய்வதற்காக அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டி ருந்தனர். அப்போது மூன்று பெண்கள் நீரில் மூழ்கத் தொடங்கினர். அவர்களைக் காப்பாற்ற ஜெகன், குமரேசன் இருவரும் ஆற்றில் குதித்தனர். பெண்களைக் காப்பாற்ற முயன்றநிலையில் அவர்கள் மூன்று பேரும் பாதுகாப்பாக கரை ஒதுங்கிவிட்டனர். அவர்க ளைக் காப்பாற்றச் சென்ற அண்ணன்-தம்பி இருவரும் நீரில் மூழ்கினர். அக்கம் பக்கத் தினர் இரண்டு பேரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் மீட்க முடிய வில்லை. இதனால் குடும்பத்தினர் கண் முன்னே ஜெகன், குமரே சன் நீரில் மூழ்கி உயிரி ழந்தனர். தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறை யினர் இருவரது உடலையும் மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.