tamilnadu

img

அரைக்கம்பத்தில் அமெரிக்க தேசியக்கொடி பறக்கும்

வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் நினைவாக அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அதிபர்  டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முத லிடத்தில் உள்ளது. மக்களை தொற்றிலிருந்து காப்பாற்ற உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் , சீனா மீது பழியைப்போட்டு, தப்பித்து வருகிறார்  அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்நிலையில் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் 96,354 பேர் பலியாகியுள்ளனர், மேலும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 902 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.இந்நிலையில், கொரோனா வைரஸால் நாம் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச்சின்னங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.  திங்களன்று, நம் தேசத்திற்காக உச்சகட்ட தியாகத்தை செய்த நமது இராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவாக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

;