tamilnadu

விழுப்புரம் , கடலூர் முக்கிய செய்திகள்

வாகன திருடர்கள் கைது
விழுப்புரம், ஜூலை 31- விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்  இருசக்கர வாகன திருட்டு ஏற்பட்டு வந்ததை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர் கு.ஞானசேகரன் தலைமையில் தனிப்படையினர் 30ஆம்  தேதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன  தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு  இடமான வகையில் நின்றிருந்த நபரை தனிப்படையினர் பிடித்து விசாரணை செய்தனர்.  விசாரணையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (38) என்பதும், அவர் விழுப்புரம் பகுதிகளில் வாகனங்கள் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பி லான 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்

மீன் பிடிக்கச் செல்லலாம்: கடலூர் ஆட்சியர்
சிதம்பரம்,ஜூலை.31-கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் சுருக்குமடி வலை பிரச்சனை யால் இரு கிராம மீனவர்க ளிடையே ஏற்பட்ட மோதலில் 4 படகுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் மீனவ கிராமங்க ளில் பதற்றமான சூழல் நில வியது. இதனைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு  செல்ல வேண்டாம் என உத்தரவிட்டார். இதற்கிடையே மீன வர்கள் மத்தியில் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில், மீனவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதை யடுத்து வியாழக்கிழமை (ஆக. 1) முதல் மீனவர்கள் அனுமதிக்கப்பட்ட மீன் வலை களை மட்டும் பயன்படுத்தி மீன் பிடிக்கச் செல்லலாம் என்று ஆட்சியர் அறிவித்தார்.