விழுப்புரம், செப். 12- விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை திறக்க மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவல கத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் பெற வந்து செல்கின்றனர். அப்படிவந்து செல்லும் பொதுமக்கள் அதி காரிகள் அழைக்கும் வரை அமர்ந்து காத்த்தி ருப்பதற்காக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மாவட்ட புத்தாக்க திட்டத்தின் கீழ் கடந்த 2012 -13 ஆம் ஆண்டில் ரூ.4.36 லட்சம் மதிப்பில் காத்தி ருப்போர் கூடம் விழுப்புரம் வட்டாட்சியர் அலு வலகத்தில் கட்டப்பட்டது. கட்டிய சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த கட்டி டம், சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இன்றி பூட்டியே கிடக்கிறது. அதில் வட்டாட்சி யர் அலுவலகத்தில் தேவையில்லாத பொருட்கள் அடுக்கி வைக்கும் குடோன் ஆக மாறிவிட்டனர். இதனால் தினமும் வட்டாட்சியர் அலு வலகத்திற்கு வந்து செல்லும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் அலுவலகத்துக்கு வெளியிலுள்ள மரத்தடியில் அமர்ந்து வரு கின்றனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் காத்தி ருக்கும் கூடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.