tamilnadu

சுட்டெரிக்கும் கோடை வெயில்: வதைபடும் மக்கள்

சென்னை, மே 22- தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்க ளில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை  கடந்த ஆம்பன் புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு  எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அந்த புயல் காற்றில் உள்ள  ஈரப்பதத்தை எடுத்துச் சென்று விட்டதால் வெப்பநிலை அதிக ரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் வடமாவட்டங்களில் மாவட்டங்களில் மூன்றாவது நாளாக 106,108, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி  வருகிறது இது மேலும் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம்  மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்ச ரித்துள்ளது இதனால் சிறியவர்கள் முதியவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் தேவை யில்லாமல் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.  

ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்கவில்லை. மிக தீவிர மாக இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. இத னால் வட தமிழகத்திற்கு தரை காற்று வர தொடங்கி உள்ளது.  இந்த வலிமையான தரை காற்று மேற்கு, வடமேற்கு திசையில்  இருந்து வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தரை காற்று  வருகிறது. அங்கு வெப்பநிலை அதிகரித்துள் ளது. அங்கிருந்து  சூடான காற்று தமிழகம் நோக்கி வருகிறது. இந்த காற்று  வடதமிழகத்திற்குள்தான் நுழைகிறது. இதனால் தமிழ கத்தில் வெப்ப காற்று அடித்து வெப்பநிலையை உயர்த்து கிறது. இதுதான் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்றும் தெரிவித்திருக்கிறது.

;