சென்னை:
தென்மேற்கு பருவமழை அந்தமானில் துவங்குவதன் காரணமாக வங்க கடலின் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகிறது. இந்த புயலுக்கு தாய்லாந்து ‘அம்பன்’ என்று பெயர் சூட்டியுள்ளது. அம்பன் புயல் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.இந்த புயல் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை, புயல் பாதிப்பு இல்லை என்றாலும் கூட, ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்காசி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது.