tamilnadu

‘நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடுக!’

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.22- கூட்ட நெரிசலைத் தவிர்த்திட நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், மாவட் டத் தலைவர் பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கிலோ ஒன்றுக்கு ரூபாய் 1 வீதம் விவ சாயிகளிடம் பிடித்தம் செய்யும் நிலை உள்ளது. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளில் நடைபெறும் ஊழல் முறை கேடுகளை தடுத்திட வேண்டும்.  விவசாயிகள், அதிகாரி களைக் கொண்ட கண்காணிப்பு குழுக்களை ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலைய அள வில் அமைத்திட வேண்டும். எக் காரணத்திற்காகவும் கொள் முதல் தடைபடாமல் இருப்ப தோடு, நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள் முதல் செய்திடப்படும் என ஆட்சி யர் அறிவித்துள்ளதை நடை முறைப்படுத்த வேண்டும். 

ஈரப்பதத்தை காரணத்தை காட்டி விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதில் இருந்து புறக்கணிக்கக் கூடாது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளில் கூட்ட நெரிசலை தவிர்த்தி டும் பொருட்டு, நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்திட வேண்டும். அப்படி அமல்படுத்தும் போது விவசாயி களிடமிருந்து மட்டும் கொள் முதல் செய்யும் வகையில் உரிய விதிகளை வகுத்திட வேண்டும்.  1.10.2019 அன்று வெளியிட்ட நெல் குறித்த அறிவிப்பில், மத்திய அரசின் பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு, ரூ.1,815 என்பதுடன், மாநில அரசின் ஊக் கத் தொகையாக ரூ.50 சேர்த்து ரூ.1,865 குவிண்டாலுக்கான விலையும், மத்திய அரசின் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,835 என்பதுடன், மாநில அரசின் ஊக்கத்தொகை ரூபாய் 70 சேர்த்து 1,905 குவிண் டாலுக்கான விலையும் தீர்மா னிக்கப்பட்டுள்ளது.  இன்றைக்கு கூடுதலாகி உள்ள உற்பத்தி செலவு மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய வற்றை கவனத்தில் கொண்டு, சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் கேரள மாநில அரசு வழங்குவது போல குவிண்டால் ஒன்றுக்கு விலை ரூ.2,630 என்பதுபோன்று, மாநில அரசின் ஊக்கத் தொகை யை உயர்த்தி, இப்பருவ நெல் கொள்முதல் விலை உயர்வை அறிவித்து கொள்முதல் செய்திட வேண்டும்”. இவ்வாறு கேட்டுக் கொண் டுள்ளனர்.

;