திருவில்லிபுத்தூர், ஜூலை 20- திருவில்லிபுத்தூரில் கொரனோ பர வலைக் கட்டுப்படுத்த நகரின் வடக்கு ரத வீதி, மாதாகோவில் தெரு, ரைட்ட்டன்பட்டி, காவலர் குடியிருப்பு ஆகிய நான்கு பகுதி களை மாவட்ட ஆட்சியர் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவித்தார். இதை யடுத்து நகராட்சி நிர்வாகம் திங்கட்கிழமை நான்கு பகுதிகளையும் முழுமையாக சீல் வைத்தது. இந்த நடைமுறை ஒரு வார காலத்திற்கு அமலில் இருக்கும்.