tamilnadu

விழுப்புரத்தில் ரூ.2.55 கோடியில் நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம்.ஜன.27- நாட்டின் 71ஆவது குடிய ரசு தின விழாவுக்கு, மாவட்ட  ஆட்சியர்ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமாரு டன் திறந்த ஜிப்பில்  காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி., சாரண,  சாரணியர், இளம் செஞ்சிலு வைச் சங்கத்தினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், காவல் துறை யினருக்கான தமிழக முதல மைச்சரின் காவலர் பதக்கங்  களை 58 பேருக்கு வழங்கி னார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், வாரிசுகளுக்கும் கதராடை களை அணிவித்தும், பரிசுப்  பொருட்களை வழங்கியும் கவுரவித்தார். மாற்றுத்தினா ளிகள் நலத் துறை, வரு வாய்த் துறை, வேளாண் துறை, முன்னாள் படை வீரர்  கள் நலத் துறை, தோட்டக்  கலைத் துறை, சமூலநலத் துறை உள்பட 14 துறைகள்  சார்பில், 482 பயனாளி களுக்கு டிராக்டர், வேளாண்  பொறியியல் உபகரணங்கள்,  சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 55 லட்சத்து 57 ஆயிரத்து 324 மதிப்பீட்டில் அரசு நலத் திட்டங்களை வழங்கினார்.

;