tamilnadu

img

பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம்

காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் பேரூராட்சி மைதானத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு வானூர் வட்டச் செயலாளர் ஹலில் பயாஸ் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மூசா கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், தலைவர் எம்.ஐ. அலாவுதீன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.