விருதுநகர், மே 14- விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை யில் தெரு விளக்கு பொருத்தப்பட்ட மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ளது சூலக் கரை பகுதி. இங்குள்ள இ.பி காலனி யில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி யில் தெரு விளக்கு பொருத்தப்பட்ட மின் கம்பம் ஒன்று உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், பொதுவாக கோடை காலங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வது வழக்கம். எனவே, மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென பொது மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், தற்போது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேநிலை நீடித்தால் மின்வாரிய அலு வலகம் முன்பு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என தெரிவித்தனர்.