பாபநாசம் அருகே அம்மாபேட்டை அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. அருகில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன், பொதுமக்களின் நலன் கருதி இந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.