சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில், வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.