விழுப்புரம், ஜூலை 17- விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் தளவானூர் ஏரி வரத்து வாய்க்கால், ஆழாங்கால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கக்கோரி பலமுறை முறையிட்டு வருகி றோம். ஜமாபந்தியில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சொட்டுநீர் பாச னம் அமைப்பதற்காக விண் ணப்பித்துள்ள விவசாயி களுக்கு காலதாமதமின்றி சொட்டுநீர் பாசனத்தை அமைத்து கொடுக்க வேண் டும். கம்பு, சோளம், ராகி, தினை உள்ளிட்ட சிறுதானி யங்களின் விதைகளை இருப்பு வைத்து தேவைக் கேற்ப விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர் களும் வறட்சியால் பாதிக் கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு நடத்தி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், வங்கி களில் விவசாயிகளின் பேரில் வியாபாரிகள் நகைக்கடன் வாங்கி பயன்பெறுகின்றனர். அதற்கு இடமளிக்காமல் தகுதியான விவசாயிகளுக்கு மட்டும் நகைக்கடன் வழங்க வேண்டும். 2 வருடத்திற்கு ஒருமுறை வழங்கக்கூடிய மண்வள பாதுகாப்பு அட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கோட்டாட்சியர் குமாரவேல், கோரிக்கைகள் மீது விரை வில் நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். கூட் டத்தில் வட்டாட்சியர்கள் விழுப்புரம் செல்வராஜ், விக்கிரவாண்டி பார்த்திபன், நேர்முக உதவியாளர் அலெக்சாண்டர், வருவாய் ஆய்வாளர் சாதிக் உட்பட அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.