tamilnadu

img

சதுரகிரியில் மூச்சுத்திணறலால் 4 பேர் உயிரிழப்பு

சதுரகிரி கோயிலில் மூச்சுத் திணறலால் 4 பேர் உயிரிழந்தனர் என்பதை காவல் துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 27 ம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயிலுக்கு சென்ற முருகேசன், ராஜசேகர், சுசீலா உள்ளிட்ட 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.