திருப்பூர், ஆக. 31- திருப்பூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செயல்பாடு கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியபோது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறு வனம் கடந்த மே 2011 ஆம் ஆண்டு புத்து யிர் ஊட்டப்பட்டு சந்தாதாரர்களுக்கு மாதம் ரூ.70 என்ற மிகக் குறைந்த கட்ட ணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது. இச்சேவையினை மேலும், விரிவுபடுத்தும் வகையில் கடந்த 17.04.2017 அன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தி டமிருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று கடந்த 01.09.2017 அன்று டிஜிட்டல் ஒளிபரப்பு முறை தொடங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் இதுவரை சுமார் 36 இலட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 35.12 இலட்சம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதா ரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட் டுள்ளது.
இதனால் பொது மக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை இந்நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகி றது. மேலும், இச்சேவையினை பொது மக்கள் முழுமையாகப் பெறும் வகை யில், மக்களின் கோரிக்கையின் படி அரசு கேபிள் கட்டணம் பாதியாக ரூ.130 மற்றும் ஜி.எஸ்.டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண குறைப்பின் காரணமாக கடந்த நாட்களில் சுமார் 22 இலட்சமாக இருந்த செட்டாப் பாக்ஸ் தற்போது 25 இலட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவ னத்தின் சார்பில் 1 கோடி இலவச செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களின் எண்ணிக்கை சுமார் 951, அரசு செட்டாப்பாக்ஸ் எடுத்த வர்களின் எண்ணிக்கை 669. நமது மாவட்டத்திற்கு வரப்பெற்ற செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை சுமார் 1,36,300 ஆகும். மேலும், பொதுமக்கள் அனைவரும் தனியார் செட்டாப்பாக்ஸ் களை தவிர்த்து அரசு செட்டாப்பாக்ஸ் களை வாங்கும் வகையில் தமிழகம் முழு வதும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித் துக்கொள்கிறேன் என்றார்.