tamilnadu

img

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை, அக். 29- வங்கக் கடலில் உருவாகி யுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்  பகுதியால் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடல் மற்றும் தெற்கு இலங்கை கட லோர பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உரு வாகி உள்ளது. இது குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து சென்று வலுப்பெறும். இதைத் தொடர்ந்து தாழ்வுப்பகுதியானது தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து அக்.31 ஆம் தேதி நள்ளிரவு காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக பல மடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ கத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திரு வள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை, விருது நகர், மதுரை, சிவகங்கை, ராம நாதபுரம், தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இதுதவிர ஒரு சில பகுதி களில் மழையின்போது இடி மற்றும் மின்னல் தாக்கம் அதிக மாக இருக்கும். மேலும் காற்ற ழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால்  அடுத்த 3 நாட்கள் தென்மேற்கு  வங்கக்கடல் மன்னார்வளைகுடா, குமரிக் கடல் மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் காற்று பலமாக வீசும் என்பதால் மீன வர்கள் மீன்பிடிக்கச் செல்ல  வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி யால் தூத்துக்குடி வஉசி துறை முகத்தில் 3 ஆம் எண் புயல்  எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. மீன்வளத்துறை அறி வுறுத்தல் காரணமாக விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீன வர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல்பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் துறைமுகத்திலும் 3 ஆம்  எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டு உள்ளது. விசைப் படகு மீனவர்களுக்கு, மீன்  வளத்துறையின் மீன்பிடி அனு மதி டோக்கன் வழங்கவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை கட லுக்குள் செல்ல வேண்டாம் என  ஒலி பெருக்கியின் மூலம் தெரி வித்து வருகின்றனர். சூறைக் காற்றில் கரையோரத்தில் நிறுத்தி யிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் கடல் சீற்றத்துடன் காணப்  படுகிறது. இதனால் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளம், மற்றும் 800-க்கும் மேற்  பட்ட விசைப்படகு மீனவர்கள்  கடலுக்கு செல்லவில்லை. அரபிக்  கடலில் நிலைகொண்டுள்ள ‘கியார்’ புயல் காரணமாக 15-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீன்பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி யுள்ளதாகவும், அரசு ஹெலி காப்டர் மூலம் தேடி மீட்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

;