tamilnadu

img

மேட்டூர் : நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர்அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரத்து 722 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குவினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிவீதம் நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு500 கனஅடி வீதம் நீர்திறக்கப்படுகிறது. அணையின்நீர்மட்டம்114.83 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில்இருந்து காவிரியில் வியாழனன்று வினாடிக்கு 26,500 கனஅடிநீர் திறக்கப்பட்டது. கனமழையும் சேர்ந்து கொண்டதால் மேட்டூர்அணைக்கு நீர்வரத்து 34 ஆயிரத்து 722 கனஅடியாகஉள்ளது.