tamilnadu

img

ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்க நடவடிக்கை: முதல்வர்

சென்னை, ஆக. 7- பருவமழை பொய்க்கும் காலங்களில் மழைநீர் சேமிப்பு அவசியம் என்பதால் தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு  சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  சென்னை தரமணியில் உள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி  நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டு விழா கொண்டா டப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அந்த  நிறுவனத்தில் நடைபெறும் வளங்குன்றா  வளர்ச்சி, பருவநிலை மீட்சிக்கான கருத்த ரங்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதனன்று (ஆக.7)  தொடங்கி வைத்தனர். அப்போது. நிறுவனத்தின் 30 ஆண்டு  கால ஆராய்ச்சி புத்தகத்தை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். பின்னர் அவர் பேசு கையில், வேளாண் விஞ்ஞானிகளில் முதன்மை விஞ்ஞானியாக திகழ்ந்து வரு பவர் எம்.எஸ். சுவாமிநாதன். வேளாண் தொழில் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு  எம்.எஸ் சுவாமிநாதனின் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனப் புகழாரம் சூட்டினார். இதை அடுத்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் ஆண்டறிக்கை மற்றும் கொள்கை அறிக்கை மலரை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசுகை யில், சுவாமிநாதன் உலகம் போற்றும் விவசாய  விஞ்ஞானி சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறு வனத்திற்கு வழங்கிய நிலத்தின் குத்தகை கான காலம் நீட்டிக்கப்படும். 

கடந்த சில ஆண்டுகளை போலவே  இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்துவிட்ட தால், அண்டை மாநிலங்களில் உற்பத்தியா கும் ஆற்றுநீரை பயன்படுத்தியே விவசாயம்  செய்யும் சூழல் உள்ளது.  தொடர்ந்து தண்ணீர்  பிரச்சனை குறித்து பேசிய முதல்வர், நீர்மேலாண்மை திட்டம் மூலம் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க தமிழக அரசு  தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வும், தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு  நீர் கூட வீணாகாமல் பாதுகாக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் பசுமை புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திட தீவிரமாக தமிழக அரசு செயல்பட்டு வரு கிறது. கடந்த 8 ஆண்டுகளில், 6-வது முறை யாக தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முதலி டம் வருவதாக கூறினார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கஸ்தூரி அன் சன்ஸ் தலை வர் என்.ராம், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமி நாதன், உலக சுகாதார நிறுவனத்தின் துணை  பொது இயக்குநர் மற்றும் தலைமை விஞ் ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், மதுரா  சுவாமிநாதன், நிர்வாக இயக்குநர் அனில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;