tamilnadu

img

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை,ஆக.27- நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வரும் 29 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இதன் காரணமாக நாட்டின் தென்பகுதிகளில் பருவமழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் சாதக போக்கின் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 29 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அதனால் தென்மேற்கு பருவமழை மீண்டும் தெற்கு தீபகற்ப பகுதிகளில் வலுப்பெற வாய்ப்பு உள்ளாதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.