tamilnadu

img

கொரோனா: 10 மாவட்டங்களில் வீடு வீடாக ஆய்வு

சென்னை, மார்ச் 29- கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளி கள் சார்ந்த 10 மாவட்டங்களில் முதல் வீடு  வீடாக ஆய்வு நடத்தப்படும் என, சுகா தாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது வரை தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, குமரி, ஈரோடு. சேலம், கோவை, நெல்லை, வேலூர். காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 42 பேருக்கு  நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, அவர்கள் இருக்கக்கூடிய இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்ற ளவை ‘கன்டெய்ன்மெண்ட்’ மண்டலமாக அடையாளப் படுத்தி, அங்கு நோய்தடுப் பிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை சிறப்பு குழுக்கள் மூலம் மேற் கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

1500 மாதிரிகளை பரிசோதித்ததில் 41 நோயாளிக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 மாதிரிகளுக்கு இன்னும் சோதனை நடக்கிறது. தனி மைப்படுத்து இருப்பவர்கள் வீட்டுக்கு வெளியே ஸ்டிக்கர் ஒட்டி உள்ளோம். மார்ச் 29 முதல் வீடு வீடாக கணக்கெ டுக்கும் பணி நடைபெறுகிறது. அப்போது காய்ச்சல், இருமல் ஏதாவது இருந்தால் உட னடியாக அவர்களுக்கு முக கவசம் கொடுக்கப்படும். அவர்களின் குடும்பத்தா ருக்கும் கொடுக்கப்படும். அந்தப் பகுதி யில் 60 வயதிற்கு மேற்பட்டோர், ரத்த அழுத்  தம், சர்க்கரை நோய் உள்ளோர் யார்  யார் இருக்கிறார்கள் என்பதை அதிகாரி கள், லிஸ்ட் எடுப்பார்கள். அவர்களை வீட்டி லேயே தனிமைப்படுத்தி இருக்க சொல்ல போகிறோம். இதனால், சமூக பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றும்  தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது கட்டத்  தில் உள்ளது பீலா ராஜேஷ் கூறினார்.