தமிழகத்தில் கொரோனா தடுப்பு நட வடிக்கைகளை அமல்படுத்தவும், கண் காணிக்கவும், அவசிய சேவைகள் தடை படாத வகையில் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதி காரிகள் 40 பேர் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுக்களு டன் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமைச் செயலகத்தில் வியாழ னன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், தடையுத்தரவு களை கண்டிப்பாக அமல்படுத்துவதற் கான நடவடிக்கைகள் குறித்து ஆலோ சிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து வரவேண்டிய அத்தியாவசியப் பொருட் களை இடையூறின்றி கொண்டுவருவது குறித்தும், கொரோனா விரைவுப் பரி சோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட் விநியோகம் பற்றியும் ஆலோசிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.