tamilnadu

img

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

 சென்னை,நவ.9- தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்க ளுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய  இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேல டுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு மற்றும் உள்  மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மித மான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். மேலும் கோவை, நீலகிரி, தேனி,  திண்டுக்கல், சேலம், மதுரை, தரும புரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்  களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறினார்.

;