tamilnadu

img

50 லட்சம் வீடுகள், வயல்வெளிகளில் கருப்பு கொடி

சென்னை, ஜூலை 27 - விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி திங்க ளன்று (ஜூலை 27) தமிழகம் முழுவதும் 50 லட்சம் இடங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. மத்திய பாஜக அரசு பொதுமுடக் கத்தை பயன்படுத்தி மக்கள் மீது அடுக் கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வரு கிறது. அவசர சட்டங்கள், நிர்வாக உத்தர வுகள் மூலம் நாட்டின் நலனுக்கு எதிராக, கார்ப்பரேட், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

அதன் ஒருபகுதியாக, மின்சார சட்ட திருத்த மசோதா 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020, விவ சாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020  ஆகிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், தமிழக அரசின் கட்டண கொள்ளையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திங்களன்று (ஜூலை 27) தமிழ கம் முழுவதும்  வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடை பெற்றது.

இதனையொட்டி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் தலை மையில் சென்னை தாம்பரத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ப்போராட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து 50 லட்சம் வீடுகள், தெருக்களில், வயல்வெளிகளில் கருப்பு கொடியேற்றி யும், நகர்ப் பகுதிகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டங்களை விவசாயிகள் நடத்தி யுள்ளனர். மின்சாரம், விவசாயம் போன்றவை மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ளன. பொதுமுடக்கத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளின் உரிமை களை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டங்கள் மாநில அரசு களின் உரிமைகளை பறிக்கக் கூடிய தாக உள்ளது. மத்திய அரசு சட்டவிரோத மான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.  தமிழகத்தைப் போன்று ஹரியானா மாநிலம், சண்டிகரில் டிராக்டர்களுடன் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளனர். மக்களின் உணர்வு களை புரிந்து கொண்டு மத்திய அரசு சட்ட த்தை திரும்ப பெற வேண்டும். இல்லா விடில், அடுத்தகட்டமாக போராட்ட ஒருங்கிணைப்புக்குழு கூடி நாடு முழு வதும் அனைத்து மாநிலங்களிலும் சட்டத் தை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடைபெறும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசும், நில அளவைக்கான கட்டண உயர்வை மாநில அரசும் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.